வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (16) வடமாகாண சபைக்கு சென்றிருந்த போதே சிவாஜிலிங்கத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எனவே வடமாகாண சபைக்கு வெளியே வைத்து அவர் தீபமேற்றி அஞ்சலி செய்த போது, பொலிஸார் அந்த தீபங்களை எடுத்து எறிந்து அஞ்சலி செலுத்துவதைத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் சிவாஜிலிங்கத்தையும் அனந்தியையும் தவிர மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் அங்கு சென்றிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.