வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்ற விவாதத்தினை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏகனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்தனை வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கு 22 ஆயிரத்து 728.117 மில்லியன் ரூபா நிதி செலவீனத்திற்காக ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.