இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் போல் மொன்ஞ்சு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார்.
இரண்டு நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த பிரான்ஸ் தூதுவர் இன்று காலை 10.30 மணிக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரைச் சந்தித்து போருக்குப் பின்னரான வடக்கின் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்.
சந்திப்பில் வடக்கில் இராணுவப் பிரசன்னம், காணி சுவீகரிப்பு, வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள், ஜெனீவா மாநாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, இன்று காலை 9.30 மணிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியை அவரது வாசஸ்த்தலத்தில் சந்தித்து போருக்குப் பின்னரான அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார்.
மேலும் இன்று மாலை யாழ்.பல்கலைக்கழகத்திற்கு பயணம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.