வடமாகாண சபையினராகிய நாங்கள் வசதிகளற்ற நிலையில் இருக்கின்றோம் – முதலமைச்சர்

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வசதியான நிலையில் இருப்பதினை அவரை நீங்கள் சந்திக்கச் செல்லும் போது அறிவீர்கள்” என சிறில் ரமபோசவிற்குக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

cm sa meet

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களை யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து மேலும் தெரிவித்ததாவது,

“வடமாகாண சபையினராகிய நாங்கள் வசதிகளற்ற நிலையில் இருக்கின்றபடியால் உங்களுடனான சந்திப்பினை விருந்தினர் விடுதியில் நடத்துகின்றோம். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி எவ்வளவு வசதியாக இருக்கின்றார் என்பதை அவரை சந்திக்கச் செல்லும்போது நீங்கள் அறிவீர்கள். இந்நிலையிலே எங்கள் வடமாகாண சபையின் நிர்வாகம் இருக்கின்றது” என எடுத்துக்கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள் –

யாழில் ரமபோச குழு: அமைச்சர் டக்ளஸ் வரவேற்றார்

தமிழருக்கு ஆதரவான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் – யாழில் ரமபோஷ!

Related Posts