வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் பல்கலைக்கழக மாணவி

election-meeting-candidateநடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் அரசியல் கட்சியான ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில் இவர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழத்தில் கல்வி கற்று வரும் புங்குடுதீவைச் சேர்ந்த கந்தசாமி விதுஜா என்பரே இவ்வாறு போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் பல பாதிப்புக்களை எதிர்கொண்ட போதும் வடக்கு தேர்தலில் களமிறங்கும் இளம் பெண் வேட்பாளராக இவர் திகழ்கின்றார்.

பல அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்திய போதும் அவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்தலில் குறித்த மாணவியை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts