வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி கிட்டும்: தயா மாஸ்டர்

thaya-masterநடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியில் தான் உட்பட போட்டியிடும் 20 பேர்தான் மாகாண சபை உறுப்பினர்களாக மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வருமான வாய்ப்புகள் இன்றி வாடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியே தான் இந்தத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும் இந்த மாகாண சபையும் ஏனைய மாகாண சபைகள் போன்றே இயங்கும். மத்தியில் ஆளும் அரசுடன் இணக்கமான உறவைக் கட்டியெழுப்பி, வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

மேலும் வடக்கு மற்றும் தெற்கு நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கும் வடமாகாண சபை ஒரு பாலமாக செயற்படும். ஐக்கிய இலங்கையை ஆதரித்து செயற்படுவது தவிர, ஒருபோதும் பிரிவினைவாத சிந்தனையுடன் வடமாகாண சபை செயற்படாது என்றும் தயா மாஸ்டர் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

Related Posts