வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேர் தகுதி: பிரதி தேர்தல் ஆணையாளர்

voters-listவடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதியுடையவர்களாக உள்ளனர் என்று பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்தார்.

யாழ். ஞானம்ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி யாழ் மாவட்டத்தில் 426,703 வாக்காளர்களும், மன்னார் மாவட்டத்தில் 70, 085 வாக்காளர்களும், வவுனியா மாவட்டத்தில் 96, 702 வாக்காளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 59, 409 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68,584 வாக்காளர்களுமாக மொத்தம் 721, 488 வாக்காளர்களாக பதிசெய்துள்ளனர்.

யுத்த காலப்பகுதியல் உயிரிழந்த மற்றும் காணாமல் போனாவர்கள், மற்றும் புலம்பெயர் தேசத்தில் இருந்தவர்களது பெயர் விபரங்களும் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டுக்கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அவர் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு மேற்கொள்ளும் போது அனைவரது விபரங்களும் சரியான முறையில் ஆய்வு செய்து பதிவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

Related Posts