வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம்

யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

north-mahana-sabai-vicki

முன்னதாக கைதடிப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அங்கிருந்து திருவுருவப் படங்கள் எடுத்து வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts