வடமாகாண கல்வியமைச்சர் பதவி விலகல் கடிதத்தை கட்சிக்கு அனுப்பினார்

வட மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதாக இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் ஒப்படைத்துள்ளார் என்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமாச் செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

வடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையிலேயே, குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமாச் செய்துள்ளார். இராஜினாமா கடிதம் முதலமைச்சரிடமே வழங்கப்படவேண்டும் அப்படி வழங்கினாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் இது தொடர்பில் வடக்கு மாகாணசபையில் இருந்த எந்த வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts