வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள்

chevrolet-tavera-South-Indian-Car-rentalவடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

விரைவில் இந்தக் கார்கள் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபையைக் கொண்டு நடத்துவதற்கு இந்தியா உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், வடக்கு மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடிய துணைத் தூதுவர் வி.மகாலிங்கம், சொகுசுக் கார்கள் வழங்குவது தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.

இதற்கமைய விரைவில் உறுப்பினர்களுக்கான சொகுசுக் கார்கள் வழங்கப்படவுள்ளன.

Related Posts