வடமாகாண ஆசிரியர்களுக்காக கைவிரல் அடையாள நடைமுறையில் மாற்றம்

பாடசாலைகளில் தற்போது தின வரவிற்காக பயன்படுத்தப்படும் கைவிரல் அடையாள நடைமுறையினால் கடந்த ஆண்டு நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டமை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனால் மாற்று ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாணத்தில் தற்போது பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சணைகள் தொடர்பிலும் பலரும் எமது கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவ்வாறு பல தரப்பாலும் சுட்டிக்காட்டிய விடயங்களில் நியாயபூர்வமான விடயங்கள் எனக் கண்டறியப்பட்டவற்றிற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு தற்போது தீர்மானித்துள்ளோம். அதன் பி்காரம் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முக்கிய விடயங்களை ஆராய்ந்தோம்.

அதில் பாடசாலைகள் 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றமையினால் பல இடங்களில் ஆசிரியர்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டு 7.30ஐ தாண்டி 5 அல்லது 10 நிமிடங்கள் தாமதமாக சென்றாலும் அவ்வாறு தாமதமாகச் சென்ற 3 நாட்களிற்கு முழுநாள் விடுமுறை கழிக்கப்படுகின்றது. இதேநேரம் 2 அல்லது 3 பிள்ளைகள் பாடசாலை செல்லும் வயதில் உள்ள ஆசிரியர்கள் பிள்ளைகளை பாடசாலை அனுப்பி அவர்களும் கல்விக் கூடத்திற்கு சமூகமளிக்கும்போது சில நிமிட தாமதம் என்ற பெயரால் ஆசிரியர்களின் எதிர்காலத்தையே பாலக்கும் நிலமை இட்டுச் செல்கின்றது.

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பல ஆசிரியர்கள் சம்பளம் அற்ற விடுமுறை வரையில் இட்டுச் சென்றுள்ளது. இதேநேரம் பல பாடசாலைகளில் தயார் படுத்தப்பட்ட மாலை நேர வகுப்புகள் அல்லது ஆசிரியர் கலந்துரையாடல்கள் இடம்பெறுவது எவரும் நிராகரிக்காதபோதும் பாடசாலை ஆரம்ப நேரத்தை மட்டுமே கருத்தில்பொள்ளும் அதிபர்கள் 1.30 பாடசாலை நிறைவுற்றால் 2 மணியையும் தாண்டியும் ஆசிரியர்களை வீடு செல்ல அனுமதிக்காத நிலமை என்பதோடு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஆசிரியர் கூட்டம் என மறித்துவைப்பதனால் பிள்ளக்களை ஏற்றிவந்து வேறு பாடசாரையில் இறக்கிவிட்டு வரும் ஆசிரியர்களின் பிள்ளைகள் நடுவீதியில் நிற்கும் நிலமையும் கானப்படுகின்றது.

எனவே இவற்றின் அடிப்படையில் தற்போது 7.30ற்கு ஆரம்பமாகி 1.30ற்கு நிறைவு செய்யும் பாடசாலைகள் விரும்பினால. 8.00 மணிக்கு ஆரம்பித்து 2.00 மணிக்கு நிறைவுருத்தும் சந்தர்ப்பம் வழங்கப்படும். அதேபோன்று ஆசிரியர்கள் 15 நிமடங்கள் வரை தாமதித்து வருகை தந்தாலும் அதனை தாமதித்துச் சென்று சீர் செய்யவே அதிபர்கள் அனுமதிக்க வேண்டுமே அன்றி 5 அல்லது 10 நிமிடங்களையும் 3 நாட்கள் கணக்கிட்டு விடுமுறை கோரமுடயாது.

இதேநேரம் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் அல்லது விசேட தேவை கருதி முன் அறிவித்தல் இன்றி ஆசிரியர்களை மறித்து வேலை வாங்க முடியாது. இவ்வாறு மறித்து வேலைவாங்கும் சமயத்தில் ஆசிரியர்கள் மனித உரிமை அமைப்புக்களையோ அல்லது நீதித்துறையினை நாடினால் அதற்கு அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும். என்ற விபரங்கள் விரைவில் அதிபர்களிற்கு அறிவுறுத்தப்படும்.

இதேநேரம் கடந்த ஆண்டு ஆசிரியர்கள் விடுமுறையை தவிர்த்து தாமதித்த வரவினால் இழந்ந விடுமுறை மற்னும் சம்பளமற்ற விடுமுறைகள் தனியாக கடிக்கப்பட்டு அவர்கள் 15 நிமிடத்திற்கும் உட்பட்ட வகையில் தாமதித்த வரவு இருப்பின் அந்தளவு நேரத்திற்கும் தாமதித்த வீடு செல்லல் இருப்பின் அவர்களின் அந்த விடுமுறையை இரத்துச் செய்ய ஏற்ற ஒழுங்குகள் செய்யப்படும். ஆசிரியர்கள் ஏதும் தமது பிரச்சணைகள் இருப்பின் எனது கவனத்திற்கும் கொண்டு வரமுடியும். என்றார்.

Related Posts