வடமாகாண அமைச்சர்கள் மீதான முறைப்பாட்டு கால எல்லை ஒரு கிழமை நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டு உள்ளது.

வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான குற்ற சாட்டை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவிடம் முறைப்பாடு செய்வதற்கான கால எல்லை நேற்றைய தினம் ஆறாம் திகதியுடன் முடிவடைந்தது.

அதனை அடுத்து முறைப்பாடு செய்வதற்கான கால எல்லையை மேலும் ஒரு கிழமைக்கு நீடிப்பு செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சபையில் கோரி இருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் முறைப்பட்டுக்கான கால எல்லையை மேலும் ஒரு கிழமை நீடிப்பு செய்வதாக தெரிவித்தார்.

Related Posts