வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான குழுவுக்கு இதுவரையில் 5 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
மாகாண சபையின் 68ம் அமர்வு நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன்,
அமைச்சர்கள் தொடர்பான விசாரணை குழுவுக்கு முறைப்பாடுகளை வழங்க மக்கள் சிலர் விரும்பும் நிலையில் விசாரணை குழுவி ன் கால எல்லை நிறைவடைகின்றது. எனவே விசாரணை குழுவின் கால எல்லையை மேலும் 5 நாட்கள் அதிகரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் 5 நாட்கள் அதிகரித்து வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது டன் மேற்படி விசாரணை குழுவுக்கு இதுவரையில் 5 முறைப்பாடுகளே கிடைக்க பெற்றிருப்பதாகவும் கூறினார்.