புதிய வருடத்திலாவது வடமாகாணத்திற்கு தேவையான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
க.பொ.த. உயர்த்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய விக்னேஸ்வரன், புத்தாண்டில் அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நாளடைவில் மாற்றமடையும் என கூறினார்.
மேலும், வடமாகாண சபை இறுதி ஆண்டுக்குள் நுழைந்துள்ளதாகவும் எனவே அதற்குள் மறுக்கப்பட்ட அனைத்து உரித்துக்களையும் ஆளுநர் பெற்றுதர வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
உதாரணமாக முதலமைச்சர் நிதியம், செயலாளர்களின் இடமாற்றங்கள் போன்றவை தொடர்பான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.