வடமாகாணத்தில் 8 சதவீதமான மாணவர்களே நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என வடமாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் உள்ள 891 பாடசாலைகளை சேர்ந்த 20ஆயிரத்து 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றினார்கள்.
அவர்களில் ஆயிரத்து 727 பேரே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தி அடைந்துள்ளதுடன்,513 பாடசாலைகளில் இருந்து தோற்றிய மாணவர்களில் ஒரு மாணவர் கூட வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடையவில்லை.
கிளிநொச்சி வலயத்தில் இருந்து 3 ஆயிரத்து 141 மாணவர்கள் தோற்றினார்கள். அவர்களில் 228 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 48 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 1 790 மாணவர்களில் 218 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்துள்ளனர். 13 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
துணுக்காய் கல்வி வலயத்தில் 793 மாணவர்களில் 42 மாணவர்களே சித்தியடைந்துள்ளதுடன், 30 பாடசாலைகளைச் சேர்ந்த ஒரு மாணவனும் சித்தியடையவில்லை.
மன்னார் கல்வி வலயத்தில் 1,846 மாணவர்களில் 122 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 53 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் சித்தியடையவில்லை.
மடு வலயத்தில் இருந்து 651 மாணவர்கள் தோற்றினார்கள். அவர்களில் 32 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 26 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து 653 மாணவர்கள் தோற்றினார்கள். அவர்களில் 64 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 54 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை. பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 2 ஆயிரத்து 343 மாணவர்கள் தோற்றினார்கள். அவர்களில் 287 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 69 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
தீவக வலயத்தில் இருந்து 709 மாணவர்கள் தோன்றினார்கள். அவர்களில் 37 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 37 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
தென்மராட்சி வலயத்தில் இருந்து 867 மாணவர்கள் தோன்றினார்கள். அவர்களில் 96 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 25 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
வலிகாமம் வலயத்தில் இருந்து 2 ஆயிரத்து 811 மாணவர்கள் தோன்றினார்கள். அவர்களில் 301 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 78 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
வடமராட்சி வலயத்தில் இருந்து ஆயிரத்து 822 மாணவர்கள் தோன்றினார்கள். அவர்களில் 268 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 21 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
யாழ்ப்பாண வலயத்தில் இருந்து 3 ஆயிரத்து 80 மாணவர்கள் தோன்றினார்கள். அவர்களில் 532 மாணவர்களே வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தியடைந்தனர். 51 பாடசாலைகளை சேர்ந்த ஒரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை என வடமாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.