வடமாகாணத்தில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் ஆண்டுகளில் சுமார் 103 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

யாழ்.மாவட்டத்தில் 49 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளுமாக 103 பாடசாலைகள் இதுவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு கல்வி நிலையத்திலேயே இந்த எண்ணிக்கை உயர்வாக பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts