வடமாகாணத்தில் தனக்குள்ள அதிகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் விபரிப்பு

வடமாகாணத்தில் தனக்குள்ள அதிகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் G.A சந்திரசிறி இன்று காலை ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார் அதில் மாகாண சபை ஆளுனரை நீக்க வேண்டுமாயின்,

1 குறித்த ஆளுனர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருக்க வேண்டும்.

2 அரச நிதியை கையாடல் செய்திருக்க வேண்டும்.

3 லஞ்சம் ,ஊழல் செய்திருக்க வேண்டும்.

4 தான் பினபற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளை கைவிட்டு இருக்க வேண்டும்.

அத்தகைய நேரத்திலையே மாகாண சபை அது பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்து ஆளுனரை நீக்க முடியும். அல்லாமல் வேறு எந்த வகையிலும் ஆளுனரை மாகாண சபையினால் நீக்க முடியாது அதற்குரிய தகுதியோ சட்டமோ இல்லை

அதேவேளை மாகாணத்தில் ஆளூனருக்கு உள்ள அதிகாரம் ஆவன ,

1 மாகாண சபையை ஆரம்பித்து வைக்க முடியும்.

2 முதலமைச்சருடன் கலந்தாலோசித்து எந்தவொரு சபை அமர்வையும் பிற்போட முடியும்.

3 முதலமைச்சருடன் கலந்தாலோசித்து மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் உண்டு.

4 மாகாண சபை நியதி சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கும் அதிகாரம் உண்டு.

5 முதலமைச்சர் , அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து சபை அமர்வில் உரையாற்ற முடியும்.

6 மாகாண நியதி சட்டம் தொடர்பில் தலையிட முடியும்.

7 முதலமைச்சரை , அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உண்டு.

8 அமைச்சரவை தீர்மானங்களை ஆளூனருடன் கலந்தாலோசித்த பின்னரே அமுல் படுத்த முடியும்.

9 அமைச்சரவை தீர்மானத்தில் தவறுகள் இருந்தால் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம்.

10 நியதி சட்டத்தை அனுமதிக்கும் அதிகாரம் மற்றும் நியதி சட்டம் இறுதியாக ஆளூனரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.

11 நியதி சட்டத்தில் தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி தவறினை திருத்த கோரி மாகாண சபைக்கு ஆளுனர் அனுப்பி வைக்கும் அதிகாரம்.

12 ஆளுனரால் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் திருத்தப்படாமல் மீண்டும் அந் நியதி சட்டத்தை மாகாண சபை ஆளூனருக்கு அனுப்பி வைத்தால் அதனை ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்

ஜனாதிபதி அதனை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பார். பின்னர் அந்த நியதி சட்டத்தை மேல் நீதிமன்றம் அனுமதித்தாலே அது அங்கீகரிக்கப்படும்.

மாகாண சபைக்கு எவ்வாறு நிதி கிடைக்கின்றது ?

1 மாகாண சபை நிதி நியதி சட்டத்தின் கீழ் வரும் நிதி.
அதாவது மாகாண சபைக்கு உட்பட்ட வரிகள் மூலம் வரும் நிதி.

2 மாகாண சபை செயற்பாட்டுக்கு மத்திய அமைச்சு தரும் நிதி.
மத்திய அரசு இந்த நிதியினை மானிய அடிப்படையிலையே தரும் அதனை மாகாண சபை திருப்பி செலுத்த தேவை இல்லை.

3 மாகாண சபை திட்டங்களுக்கு மத்திய அரசு தரும் கடன்.
அதனை மத்திய அரசின் திறைசேரியின் ஊடாகவே பெற்று கொள்ளலாம்.

4 விசேட வேலை திட்டத்திற்கு வெளிநாட்டு நிதி.
இதனை மத்திய அரசின் கொள்கை திட்டத்தின் ஊடாகவே பெற்று கொள்ளலாம். அதேவேளை புலம்பெயர்ந்தவர்கள் நிதி வழங்குவதாயினும் மத்திய அரசின் அனுமதியுடன் கொள்கை திட்டத்தின் ஊடாக திறைசேரி மூலமே பெற்று கொள்ளாலாம்.

5 உள்நாட்டில் இருப்பவர் மாகாண சபைக்கு நிதி அளிப்பதயினும் மாகாண அமைச்சருடன் கலந்துரையாடி ஆளுனரின் அனுமதி பெற்று பிரதம செயலாளரின் ஊடாக மாகாண திறைசேரிக்கே அனுப்ப முடியும்.

மாகாண சபை எவ்வாறான நிதியங்களை வைத்திருக்க முடியும் ?

1 மாகாண சபை நிதியம்.
2 அவசரகால நிதியம்.

இவை இரண்டு தவிர வேறு எந்த நிதியமும் மாகாண சபை வைத்திருக்க முடியாது.

மாகாண சபை கொடுக்கல் வாங்கல்களை உள்ளக கணக்காய்வு மூலமும் அரச கணக்காய்வு திணைக்களத்தின் அதிகாரிகளாலும் கணக்காய்வு மேற்கொள்ளப்படும்.

அரச அதிகாரிகளை கையாளும் உரிமை ஆளூனரிடமே உண்டு.

அரச அதிகாரிகளை நியமிப்பது , இடமாற்றம் செய்தல் , ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளல் , அரச வேலைக்கு ஆட்சேர்ப்பு ,பதவி ஏற்றம் ,மற்றும் பதவி நீக்கம் என்பன ஆளூனராலையே தீர்மானிக்கப்படும்.

பிரதம செயலாளரை கட்டுப்படுத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை.அவர் முதலமைச்சருக்கு கீழ் பணியாற்றுபவர் அல்ல அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவர்.மாகாண நிதிக்கு பொறுப்பானவர் என்ற வகையில் முதலமைச்சருடன் சேர்ந்து செயற்படுவார்.

ஆக மொத்தத்தில் மாகாண அதிகாரம் அனைத்தும் தம்மிடம் தான் உள்ளது என சூசகமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார் ஆளுனர்.

Related Posts