வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதிய திட்டத்தில் 3,164 தொழில் நிறுவனங்கள் கடந்த வருடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் ஊழியர் சேமலாப நிதி திட்டத்தின் தொழிற் பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக யாழ். மாவட்டத்தில் 1693, கிளிநொச்சி 359, முல்லைத்தீவு 301, வவுனியா 757, மன்னார் 55 நிறுவனங்களும் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதுடன், அதில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களும், அங்கத்தவர்களின் இணைக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றதாக அவர் கூறினார்.
அதனடிப்படையில், வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதி திட்டத்தில் 902 நிறுவனங்களும் 1781 அங்கத்தவர்களும் இணைந்துள்ளனர்.
இதில், யாழில் 264 நிறுவனங்களில் 854 அங்கத்தவர்களும் வவுனியா 481 நிறுவனங்களில் 333 அங்கத்தவர்களும் கிளிநொச்சி 81 நிறுவனங்களும் 386 அங்கத்தவர்களும் முல்லைத்தீவு 63 நிறுவனங்களில் 156 அங்கத்தவர்களும் மன்னார் 13 நிறுவனங்களில் 55 அங்கத்தவர்களும் புதிதாக அங்கத்துவத்தினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.