வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்

konappulam-mallakam-akathi-mukaamவடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டசெயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த பணியாக காணப்பட்ட மீள்குடியேற்றம் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 6756 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என அப்புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .

இதில் முல்லைத்தீவு, மன்னார், மாவட்டங்களில் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு எந்த குடும்பங்களும் தற்போது இடம்பெயர்ந்த நிலையில் இல்லை எனவும் மேற்படி மாவட்டசெயலக புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை யாழ்ப்பாணத்தில் 5879 குடும்பங்களும், கிளிநொச்சியில் 524 குடும்பங்களும், வவுனியாவில் 353 குடும்பங்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts