வடமாகாணத்திலுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

வடக்கு மாகாணத்தில் இயங்கும் ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஊழியர்கள் தினவரவுப் பதிவில் கையொப்பமிடும் வசதியை ஏற்படுத்துவதுடன் மாதாந்த சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும்.

இவ்வாறு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் தனியார் துறையில் கடமையாற்றும் ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு சுமைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுமத்தப்படுகிறது.

அதிக நேரம் வேலை செய்தும் குறைவான சம்பளம் பெற வேண்டிய துப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

இதிலிருந்து ஊழியர்களை விடுவிப்பதற்கு இனிவரும் ஆண்டிலிருந்து வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவனமும் தங்களது ஊழியர்கள் தினவரவு பதிவேட்டில் கையொப்பமிடும் நடைமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும் – என்றுள்ளது.

Related Posts