வடமாகாணத்திலும் ஜேர்மன் பயிற்சி நிலையம்

இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வடமாகாணத்திலும் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஜேர்மன் எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

ஜேர்மன் இலங்கையில் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிள்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வர்த்தக சமூகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் ஒன்றில் ஜேர்மன் தூதுவர் கலந்துகொண்டார்.
இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காடய அவர். இதற்கு இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் இந்த நிலைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இரு நாட்டு வர்த்தகர்களும் அக்கறை செலுத்த வேண்டும் ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட மேலும் தெரிவித்தார்.

Related Posts