வடமாகாணத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கிய சீன அரசு!

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடிய போதே குறித்த நிதித்தொகையினை வழங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நாகலிங்கம் வேதநாயகனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த இலங்கைக்கான சீனத்தூதுவர், இப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்று உறுதியளித்தார்.

அத்துடன் வடபகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவதானிக்கையில் சந்தோசமாக இருப்பதாகத் தெரிவித்த சீனத் தூதுவர், ஊழல் ஒழிப்பு, அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ வேதநாயகன் அவர்களுடன்இ ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலனும் பங்கேற்றிருந்தார்.

Related

Related Posts