வடமாகாணத்திற்கான சம்பியன்சிப் உதைபந்தாட்ட போட்டி 2015!

வடமாகாணத்திற்கான சம்பியன்சிப் உதைபந்தாட்ட போட்டி இன்று வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தால் தினச்செய்தியின் அனுசரைணையுடன் இடம்பெறுகின்றது.

இந்த உதைபந்தாட்ட போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக, H.M.G.S பளியெக்கார (ஆளுனர் வடமாகாணம்) அனுர டீ.சில்வா (இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர்) திரு.K.T.ராஜசிங்கம் (தினச்செய்தி ஆசிரியர்) A.நடராஜா (இந்திய துணைத்தூதுவர்)மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த (யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி) திரு.மா.நவநீதமணி (தலைவர் பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்கம்) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த விளையாட்டுப் போட்டியில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 47 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றுகின்றன.

இன்று நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜூவன்ஸ் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.

தினசரி 2 போட்டிகள் நடைபெறும்.

match-time-table-page-001

match-time-table-page-002

Related Posts