வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி

வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

st-jhons

சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் வெற்றிபெற்றிருந்தது.

வெளிமாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மவுண்டன்லெவினியா, மாத்தளை ஆகிய இடங்களைச் சேர்ந்த சென். தோமஸ் கல்லூரிகளின் அணிகளையும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts