வடமாகாணசபை உறுப்பினரின் வீடு இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

pasupathi-pillaiவட மாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையின் வீடு, இன்று புதன்கிழமை (28) இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரங்களாக சோதனையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, திருநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டினை இராணுவத்தினர் இன்று புதன்கிழமை (28) அதிகாலை 4 மணியிலிருந்து காலை 8.45 மணிவரையிலும் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

மேலும், தனது வீட்டிலிருந்தவர்களின் விபரங்களை பதிவு செய்த பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தினைவிட்டு அகன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, 20இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தனது வீட்டின் வளாகத்தினைச் சூழ நின்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இருந்தும், தான் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (28) காலை 11 மணிக்கு இடம்பெற்ற காணி சுவீகரிப்பிற்கு எதிரான போட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts