வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு எந்த அரசியல் கட்சியிடமும் கோரவில்லை!- தயா மாஸ்டர்

thaya-masterவட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தயா மாஸ்டர், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடசந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை அக்கட்சி நிராகரித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என தயா மாஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில், வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தம்மை அழைத்ததாகவும், எவரையும் தான் சந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தயா மாஸ்டர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts