வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று!

சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இன்று காலை 08.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி நடைபெற்று அதன் பின்னர் சுவாமி காலை 10 மணியளவில் தேருக்கு எழுந்தருளவுள்ளார். இதனைத் தொடர்ந்து சுவாமியின் தேர் ஆரோகணம் காலை 10. 30 மணிக்கு ஆரம்பமாகும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (27) சமுத்திரத்தீர்தோற்சவமும் மறுதினமான 28 ஆம் திகதி கேணித் தீர்தோற்சவமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts