வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையின் பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும்

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் எதிர்வரும் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்டம் தும்பளை நெல்லண்டை அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ.எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி.செ.வனஜா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பல்வேறு கலை காலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் திரு.செபமாலை பிரான்சிஸ் சேவியர்-சிற்பம், திரு.கற்கண்டு சபாரத்தினம்-நாடகம், திரு.செல்லத்துரை பரஞ்சோதி-சிந்துநடைக்கூத்து, திரு.வெள்ளியம்பலம் முத்துச்சாமி-நாடகம், திரு.சின்னத்தம்பி நடனகுரு-உடுக்கடிக்கலை ஆகியோருக்கு கலைப்பரிதி-2015 விருதும் சதுரங்க ஆசான் திரு.சுப்பிரமணியம் திருச்செல்வம் சிறப்பு கௌரவமும் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts