வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்ற திட்டம்

இராணுவம் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றிய கொள்கை பிரகடனம் பற்றிய தீர்மானங்கள் எடுக்கபடுமென எதிர்பார்க்கின்றேன் என வனஜிவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Capture

வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஆராய்வு கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து வேலைத்திட்டங்கள் பற்றி அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

நெடுந்தீவு சரசாலை, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சூழலை பாதுகாத்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மக்கள் வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

சரணாலயத்தில் இருந்து நகர் கோவில் பகுதியில் உள்ள பல இடங்களை மக்களுக்கு கையளிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சுண்டிக்குளம் பகுதியில் முன்னர் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளே, மக்கள் இருப்பதனால், அந்த பகுதியை மீளாய்வு செய்யுமாறும் பணித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாத காலங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட வேண்டுமென்றும் அமைச்சர் பணித்துள்ளார்.

குட்டைக்காடு பகுதியில் வனவள அலுவலகத்திற்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளனவா என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்,

தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட இடங்களின் எல்லைகள் மீள் பரிசீலணை செய்யப்படுமென்றும், தனியார் காணிகள் மற்றும், விவசாய காணிகள், மீன்பிடி தளங்கள் என்பன மீள் பரிசீலனை செய்யப்பட்டு மீள் வரைபு வரையப்படும்.

அந்த வரைபுகள் வரும் வரை மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

அத்துடன், கட்டைக்காடு பகுதியில் வனவள பகுதியில் மிகப்பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு இராணுவத்தினர் விடுதிகளை அமைக்க முடியுமா என்றும் ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினார்கள்.

தேசிய பூங்கா அமைக்கப்படவுள்ள பகுதியில் தான் இராணுவத்தினர் முகாம் இட்டு உள்ளார்கள். அவ்வாறு அந்த பகுதியில் அமைத்து இருக்க முடியுமா என்பது பற்றி கூற முடியாது. அது தனது அதிகாரத்தின் கீழ் இல்லை என்றார்.

அந்தவகையில், அவர்களையும் உள்வாங்கி தேசிய பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று கூறினார்.

இராணுவம் உல்லாச விடுதிகளை அமைத்திருப்பது, சுண்டிக்குளம் பகுதியில் மட்டுமன்றி பலாலி பகுதியிலும் இருக்கின்றதுடன், வேறு பல பகுதிகளிலும் இருக்கின்றது.

இவ்வாறான விடயங்கள் குறித்து கொள்கைப் பிரகடனம் எடுக்கப்படவேண்டும். இது குறித்து அரசாங்கத்துடனும் பேசியிருக்கின்றோம்.

முதலில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், இராணுவம் எப்படியான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும், ஈடுபடக்கூடாது என்பது பற்றிய கொள்கைத் தீர்மானங்கள் படிப்படியாக வரும் என நம்புகின்றேன் என்றார்.

Related Posts