வடமராட்சி கிழக்கு மணல் அகழ்வு தொடர்பாக அவசர கலந்துரையாடல்

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பிரதேச மக்கள் வடக்கு மாகாண விவசாய,கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சில் பல்வேறு முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

manal-vadamarachchy

இம் முறைப்பாடுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் ஒன்று மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் எதிர்வரும் புதன் கிழமை (16.04.2014) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இல. 295, கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள மாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கில் மண் அகழ்வதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்திடம் அனுமதி பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மணல் ஏற்றி இறக்குவதில் பங்கேற்கும் உழவூர்திகள் மற்றும் பாரவூர்திகள் சங்கங்களின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகளை இக்கலந்துரையாடலில் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts