வடமராட்சி கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறித்த கிராம சேவகர்களால் நடாத்தப்படும் கவனயீர்ர்ப்பு போராட்டத்தில் கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா? அல்லது அனாவசிய அலுவலர்களால்? எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களை புறக்கணிக்காதீர்கள், கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்கள் பொருளாதார நெருக்கடி காலத்தில் ???என பதாதைகள் ஏந்தியுள்ளனர்.

Related Posts