யாழ்ப்பாணம் வடமராட்சி, உடுப்பிட்டி கொம்மாந்துறைப் பகுதியினைச் சேர்ந்த துரைராஜா அமுதாகரன் (28) என்ற இளைஞன், பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலுள்ள புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்ததுடன், அவர்களிடம் நிதியினைப் பெற்று வந்தார் என்பதற்காகவே மேற்படி நபர் கைது செய்யப்படுவதாக ரி.ஐ.டி யினரால் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.