வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு

body_foundயாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன.

எனினும் நேற்றுக் காலை கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் போது, அதில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இராணுவம் ஏனைய கிணறுகளையும் சோதனை இட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்க கூடாது என்றும், இராணுவத்தினர் பொதுமக்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts