வடமராட்சியில் நாளை கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிற்கும் தேசிய அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நாளை (சனிக்கிழமை) வடமராட்சியில் கையெழுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான யாழ்ப்பாணத்தின் இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த கையெழுத்து போராட்டமானது, காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை உடுப்பிட்டியிலும், 10 மணிமுதல் 11 மணிவரை நெல்லியடியிலும், தொடர்ந்து பருத்தித்துறை, மந்திகை, மருதன்கேணி மற்றும் குடத்தனை ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெறவுள்ளது.

Related Posts