வடமாகாணசபை இணையத்தளம் துனிசியா நாட்டு இணைய ஊடுருவல் காரர்களால் முடக்கம்!

வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இணையத்தளம் துனிசியா (Tunisia )நாட்டினை சேர்ந்த அரேபிய இணைய ஊடுருவல் காரர்களால்  முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் நேற்று முதல் முடக்கி வைக்கப்படுள்ளது. இந்த இணையத்தளம் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னரும் ஆளுனரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Prodigy TN – Fallaga Team என்று தம்மை அழைத்துக்கொள்ளும் மேற்படி ஊடுருவல்கார்கள் பெரும்பாலும் அமெரிக்க படையினருக்கு எதிரான செய்திகளை தாம் முடக்கும் தளங்களில் வெளியிட்டு வருவது வழமை. இருப்பினும் வட மாகாணசபை தளத்தில் அவ்வறான எந்த செய்திகளையும் வெளியிடவில்லை.தமது பெயரை மட்டும் இட்டுசென்றிருக்கின்றனர்.

இது தொடர்பில் எமது செய்தித்தளம் சார்பில் இணைய வல்லுனர்களை  தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம்

தாக்குதல்களை தொடுப்பதற்கு முன்பாக மாகாணசபையின் உப முகவரிகைளை முடக்கியிருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளினை அதன்மூலம் சோதித்து பின்னர் பிரதான தளத்தில் கை வைத்துள்ளனர் . அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த  உப முகவரிகளை சிலவாரங்களுக்கு முன்பாக தாக்கியுள்ளனர்.அவை சில வாரங்களுக்கு முன்பாகவிருந்தே செயலிழந்துள்ளன.அதன் தொடர்ச்சியாகவே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது என தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் தளங்கள்  மிகவும் பாதுகாப்பு குன்றிய தரவு  சேமிப்பு நிலையங்களில்  இருப்பதே இதற்கு காரணம் என்று இணைய வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் முகவரி திசைப்படுத்தும் கட்டமைப்புக்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளும் இத்தாக்குதல்களுக்கு வழிகோலுகின்றதாகவும் பெரும்பாலும் அரசியல் நோக்கில் இவ்வாறான இணையத்தளத்தாக்குதல்கள் இடம் பெறுகின்ற போதிலும் , பாதுகாப்பற்ற இணையத்தளங்கள் எழுந்தமானமான தாக்குதலுக்கு உள்ளாவதும் வழமை என்றும் அதற்கு  தளங்களின் அவை பாவிக்கும் வடிவமைப்புக்கள் (Templates) மற்றும் உதிரிகளது (Plugin) பாதுகாப்பு குறைபாடுகளும் சேவரில் வழங்கப்பட்டுள்ள கோப்பு உருவாக்குவதற்கான அனுமதிகளும் காரணம் என குறித்த வல்லுனர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

Related Posts