வடபகுதி மக்கள் மீதான அழுத்தத்தை யாழ். தாக்குதல் உணர்த்தியது: மனோ

manoவலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வின் போது இடம்பெற்ற தாக்குதலானது, வடபகுதியில் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்க்கின்றனர் என்பதையும் அவர்கள் மீதான அழுத்தத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது’ என்று கடந்த சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

‘எதிர்கட்சியிக் குழுவானது யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது வலி. வடக்கில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்வினில் உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின் அந்நிகழ்வினை குழப்பும் முகமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றதினை நாம் அறிந்தோம்.

இவற்றிலிருந்து தமிழ் மக்கள் தமது வாழ்க்கையில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையினை வெளிப்படையாக புலப்படுகின்றது. நாம் வலிவடக்கில் மட்டுமல்லாது இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிதரனின் கிளிநொச்சி காரியாலயத்திற்கும் சென்றிருந்தோம். அவருடைய அலுவலகம் பாதுகாப்பு படையினாரால் முற்றுகையிடப்பட்டது அவதானிக்கப்படக்கூடியதாக இருந்தது இது மேலும் ஒரு அடக்கமுறையினைப் புலப்படுத்துகின்றது’ என்றார்.

இப்பயணத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் இரண்டு பிரச்சினைகளை நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஒன்று மக்கள் தங்களது உறவுகள் காணாமல் போயுள்ளமை, சிறைப்பிடிக்கப்பட்டமை மற்றொன்று, பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் தமது காணிகளினை இழப்பதையும் உணர முடிகின்றது. இவ்வாறான அழுத்தத்தினை ஏற்க முடியாது. இப்பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ன அறிக்கை மூலம் சமர்ப்பணம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts