வடபகுதி மக்கள் குழப்பமடையக்கூடாது : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவே வடபகுதி மக்கள் குழப்பமடையக்கூடாது என்றுசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர்மேலும் தெரிவிக்கையில்

மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்த விடயம் தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயம் தொடர்பாக என்னுடன் தொடர்பு கொண்டு உடனடி கவனம் செலுத்துமாறு பணித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதையடுத்து இன்று (நேற்று) மாலையளவில் குறித்த சம்பவத்துடன் தொடர்ர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டனர்.அத்தோடு உடனடியாக தற்காலிகமாக பணிநீக்கமும் செய்யப்பட்டனர் என்றார்..

மரணமடைந்த இரு இளம் பல்கலை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts