வடபகுதி நிதியே மகிந்தவின் மாளிகை! – விஜயகலா

மகிந்த அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளார்களே தவிர போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார்.

நேற்று கிளிநொச்சியில் பெண்களுக்கு வலுவூட்டல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார் .

மகிந்த அரசு பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறி லட்சக்கணக்கில் அப்பாவிகளை தான் கொன்று குவித்துள்ளது.போர் முடிவடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் போரால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மகிந்த அரசு விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என கூறி போர் நடாத்தி 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை தான் கொன்று குவித்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts