வடபகுதி உற்பத்தியாளர்கள் – ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு

வடமாகாண உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் சனிக்கிழமை, 24ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.வர்த்தக கைத்தொழில் மன்றத்தலைவர் கே.விக்னேஸ் செவ்வாய்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்த சந்திப்பில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளனர்.

எந்தப் பகுதியில், எந்த வகையான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும், உற்பத்தியாளர்களின் தேவைகள், அவர்களின் சேவையை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள் என்பவை தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

வடகம், புழுக்கொடியல், பழச்சாறு போன்ற உற்பத்திகளை மேற்கொள்ளும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts