தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் சில இளையோர் அமைப்புகள் மற்றும் புதிய இளைஞர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலர் இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் உஷாராக இருக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
திட்டமிட்ட சிலர் இராணுவம் மற்றும் காவற்துறையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இரகசியமான முனைப்புகளை மேற்கொள்ள முயற்சித்து வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.