வடசென்னையில் அமலாபால் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்?

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வடசென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. ‘விசாரணை’ படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்காக அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார்.

ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி முன்னதாக கால்ஷீட் கொடுத்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அமலாபால் விட்ட இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்தில் அமலாபால் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts