வடக்கை விட தெற்கிலேயே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்

நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை நோக்கும்போது, வடக்கை விட தெற்கிலேயே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலணியின் தவிசாளருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”தெற்கிலே அபிவிருத்தி செயற்பாடுகள் போதுமான அளவில் முன்னெடுக்கப்பட்டாலும் நல்லிணக்கம் போதுமானதாக இல்லை. தேர்தல் வாக்குகளை இலக்காகக் கொண்டு சிலர் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பௌத்த தேரர்கள் சிலரும் உடந்தையாக உள்ளனர்.

இனவாத மனநிலையில் உள்ளவர்கள் நாட்டின் தலைவராகவும் செயற்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் மக்களுக்கு முறையான தெளிவுபடுத்தல்களை ஏற்படுத்தி நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுப்போம்” என்றார்.

Related Posts