Ad Widget

வடக்கு விவசாய அமைச்சின் நிதியில் இருந்து கிளிநொச்சி விவசாயிகளுக்கு விதைநெல்

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (03.10.2014) கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

8

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில் பி.ஜி 358 ரக விதைநெல் 140 விவசாயிகளுக்கு தலா 3 புசல் வீதம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, உணவுத் தானிய விதைப்புக்காக உவர்த்தன்மையை தாங்கக்கூடிய ஏ.ரி 362ரக நெல்ரகம் 48 பேருக்கு தலா மூன்று புசல் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

நெல்ரகங்கள் தவிர அன்னாசிப் பழச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் நல்லின அன்னாசி உறிஞ்சிகளும், வெங்காய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தூய விதை வெங்காயமும் வழங்கப்பட்டது.வெங்காயத்தைக் களஞ்சியப்படுத்தும் தொட்டிகளும் அமைப்பதற்காக 5 விவசாயிகளுக்கு தலா 50,000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.

10

விவசாயத்தில் இரசாயனங்களைப் பயன்படுத்துவதால் நிலத்தடிநீர் மோசமாக மாசடைவதாகப் பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பீடைநாசினிப் போத்தல்களை கிணறுகளுக்கு அருகாமையில் வீசாமல் பாதுகாப்பான முறையில் சேகரிப்பதற்காக பெரிய பிளாஸ்ரிக் தொட்டில்களும், இயற்கைப் பசளை ஊக்குவிப்பாக சணல் விதைகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் வழங்கி வைக்கப்பட்ட விவசாய உள்ளீடுகளின் மொத்தப் பெறுமதி 1.3 மில்லியன் ரூபாய்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற விவசாய உள்ளீடு வழங்கும் இந் நிகழ்ச்சியில் வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், உதவி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுதாகரன், விதைகள் ஆராய்ச்சிப் பிரிவுப் பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி ஆகியோருடன் அதிக எண்ணிக்கையான விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தாhர்கள்.

Related Posts