Ad Widget

வடக்கு வரும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும்!

வட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருகின்ற வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ruwan-vanika-sooreyaa

இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:

வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இது தொடர்பாக இது வரை தேர்தல் ஆணையாளர் பாதுகாப்பு அமைச்சிடம் உத்தியோகபூர்வ வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லை.

வடக்கில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ள வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையாளர் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி அனுமதியைப் பெறவேண்டும். தேர்தல் ஆணையாளரின் பரிந்துரைகள் இல்லாவிட்டால் அவர்கள் என்ன நோக்கத்திற்காக அங்கு செல்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது. – என்றார்.

Related Posts