பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில் ரஜரட்ட ரெஜின ரயில் தடம் புரண்டமையால் வடக்கு ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டையில் இருந்தும், கல்கிசையில் இருந்தும் யாழ் நோக்கிச் செல்லும் ரயில்களும் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.