வடக்கு முஸ்லிம்களில் 2801 பேர் மட்டுமே இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை -முதலமைச்சர்

வடக்கிலிருந்து 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் எனினும் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்வரை வடக்கில் 26ஆயிரத்து841 முஸ்லீம்கள் மீள் குடியேற்றத்திற்கு விண்ணப்பித்ததாகவும்,

அவற்றில் 24 ஆயிரத்து 40 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டதாகவும் இரண்டாயிரத்து 801 பேர் மட்டுமே இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என்றும் வடக்கு முதலமைச்சரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது

மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட 4 ஆயிரத்து 307 காணிகளில் 3 ஆயிரத்து 145 காணிகள் அதாவது 73.02 வீதமான காணிகளில் முஸ்லீம்களே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது

 

Related Posts