வடக்கு முழுவதும் படையினர் கெடுபிடி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளான  இன்று அது கொண்டாடப்படலாம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு முழுவதும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   போர்க்காலங்கள் போல் வீதிகள் ஒழுங்களைகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு வீதிகளில் செல்வோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒருவார காலமாக குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம், நல்லூர், யாழ்.போதனாவைத்தியசாலை போன்ற முக்கிய இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் குறித்த பகுதிகளில் அதிகளவு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் உள்ள ஆலயங்களுக்கு சென்ற இராணுவத்தினர் ஆலயங்களில் மணி அடிக்க வேண்டாம்,தீபம் காட்ட வேண்டாம் குறிப்பாக இன்று மாலை இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பூசகர்களுக்கு கூறியுள்ளனர்.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உட்செல்வோரும் உள்ளிருந்து வெளியே வருவோரும் வழி மறிக்கப்பட்டு கடும் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

Related Posts