வடக்கு முதல்வருடன் ராணுவத் தளபதி சந்திப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க நேற்று (30) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு நேற்று பிற்பகலில் முதலமைச்சரின் நல்லூரிலுள்ள உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கருத்து வௌியிடுகையில், இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமாக இடம்பெற்ற ஒன்றல்ல என குறிப்பிட்டார்.

ராணுவத் தளபதி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது, தம்மை சந்திக்க வந்ததாகவும், இதன்போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் கருத்து பறிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதற்கு தாம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ராணுவ தளபதி உறுதியளித்துள்ளார்.

அவ்வாறான தருணத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள உறுதியளித்ததாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Posts