வடக்கு முதலமைச்சரின் கோரிக்கையால் கைவிடப்பட்டது அரசியல் கைதிகளின் போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் இன்று காலை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டம் இடைநிறுத்தியுள்ளனர்.

இன்று அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை பார்வையிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் அரசியல் கைதிகள் தமது போராட்டம் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

Related Posts