யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். வேம்படி மகளிர் கல்லூயில் நேற்று காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மாநாட்டில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
எதிர்கால மாணவர்களின் கல்வியும் வளமான சமுதாயமும் என்னும் தொனிப் பொருளிலான இம்மநாட்டில் யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சுமார் 2500 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாகாண கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திர ராஜா முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் கூறியதாவது,
யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் கல்வி வலயம் முதன் நிலை பெற்றிருந்தது.மீண்டும் 2009 ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்ற போதிலும் இன்னும் முழுமையான நிலை அடையவில்லை.
க.பொ.க சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் முதல் தடவை பெற்றாலும் இன்று நாம் அறிவு ரீதியாக பின்தாங்கிய நிலையில் நிக்கின்றோம். இந்நிலை மாற்றப்படவேண்டும்.
அண்மைக்காலமாக எமது மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டு வருகின்றமை மிகவும் வேதனை அளிக்கின்றது.
இந்த தழிழ் சமூகத்தினை அழித்தொழிக்கவே இந்த போதைப்பொருள் பாவனை என்று எண்ணத் தோன்றுகின்றது.
இன்று எமது மாணவ, மாணவிகள் எமது அலுவலர்கள் கூட ஆங்கிலத்தில் பிழையுமடன் எழுதுகின்றனர்கள். எமது ஆசிரியர் சமூகமும் மாணவர்கள் சமூகமும் மும்மொழி பண்டித்துவம் பெறவேண்டும் என்றார்.